ADDED : அக் 27, 2026 05:36 AM
பள்ளிப்பாளையம்: ஒட்டமெத்தை வழித்தடத்தில் திட்டமிடாமல் அமைத்த சென்டர் மீடியனால், தினந்தோறும் ஏற்-படும் கடும் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்-டிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.
பள்ளிப்பாளையம், ஒட்டமெத்தை சாலையில் மேம்பாலத்தின் ஆரம்ப பகுதியில் சாலையின் மையப்பகுதியில், சில மாதங்களுக்கு முன் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. இந்த சென்டர் மீடியனால், ஏற்கனவே குறுகி காணப்பட்ட நிலையில், தற்போது மேலும் குறுகியது.சீராக சென்றுகொண்டிருந்த வாகனங்கள் இந்த சென்டர் மீடியனால் நடந்துகூட செல்ல முடியா-தபடி கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இருபுறமும் சாலையை விரிபடுத்-திய பின், சாலையின் மையப்
பகுதியில் சென்டர் மீடியன் அமைத்திருந்தால் வாகனங்கள் சீராக சென்று வந்திருக்கும். ஆனால், குறுகிய சாலையில் சென்டர் மீடியன் வைக்கப்-பட்டதால், தினமும் போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்படுகிறது.
எனவே, சாலையை விரிவுபடுத்தி சென்டர் மீடியன் வைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நட-வடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
