sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'நாமக்கல்லுக்கு வருகை தரும் முதல்வர் கதவணை திட்டத்தை அறிவிக்க வேண்டும்'

/

'நாமக்கல்லுக்கு வருகை தரும் முதல்வர் கதவணை திட்டத்தை அறிவிக்க வேண்டும்'

'நாமக்கல்லுக்கு வருகை தரும் முதல்வர் கதவணை திட்டத்தை அறிவிக்க வேண்டும்'

'நாமக்கல்லுக்கு வருகை தரும் முதல்வர் கதவணை திட்டத்தை அறிவிக்க வேண்டும்'


ADDED : அக் 14, 2024 06:18 AM

Google News

ADDED : அக் 14, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வர், மோகனுார் அருகே காவிரி ஆற்றில் கதவணை திட்டத்தை அறி-விக்க வேண்டும்' என, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலு-சாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல், கரூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களில், விவசா-யிகள் அதிகளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்து வருகின்-றனர். மரவள்ளி கிழங்கின் அறுவடை பருவமான டிச., முதல் மார்ச் வரையிலான காலங்களில், தனியார் ஜவ்வரிசி ஆலை முத-லாளிகள், 'சிண்டிகேட்' அமைத்துக்கொண்டு, விவசாயிகளிடம் மிக குறைவான விலையில் மரவள்ளி கிழங்கை கொள்முதல் செய்கின்றனர். இதனை தடுக்க, தமிழக அரசின் கூட்டுறவுத்துறை மூலம், நாமக்கல் பகுதியில் ஜவ்வரிசி ஆலை அமைக்க வேண்டும் என, ஏற்கனவே தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்-துள்ளோம்.

மேலும், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான மோகனுார், ஒருவந்துார் பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டி, காவிரி நீரை சேமிக்கும் வகையிலும், நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டம், 2020-21ல் சட்டசபையில், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது.

தி.மு.க., அரசு ஆட்சி பொறுப்பிற்கு வந்ததும் அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தது. ஆனால், கடந்த ஆட்சியா-ளர்களால் அறிவிக்கப்பட்ட திட்டம் என கருதி, தி.மு.க., அரசு அந்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துவிட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் நடக்கும் அரசு விழாவிற்கு வருகை தரும் முதல்வர், நாமக்கல் பகுதியில் கூட்டுறவு சேகோ ஆலை அமைக்கும் திட்டத்தையும், மோகனுார் அருகே காவிரியில் தடுப்-பணை அமைக்கும் திட்டத்தையும் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us