/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் குழந்தைகள் தின விழா
/
நாமக்கல்லில் குழந்தைகள் தின விழா
ADDED : நவ 15, 2024 02:18 AM
நாமக்கல்லில் குழந்தைகள் தின விழா
நாமக்கல், நவ. 15-
நாமக்கல், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நேற்று முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின், 136-வது பிறந்த நாள் மற்றும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்து, நேருவின் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, பள்ளி மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் குழந்தைகள் தின வாழ்த்து மடல் அனுப்பி வைத்தார். தொடர்ந்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் இந்தியன் வங்கியின் புதிய கிளை மற்றும் புதிய ஏ.டி.எம்., மையத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.