/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'துாய்மை பணியாளர்கள் மரியாதையுடன் நடத்தப்படுகின்றனர்'
/
'துாய்மை பணியாளர்கள் மரியாதையுடன் நடத்தப்படுகின்றனர்'
'துாய்மை பணியாளர்கள் மரியாதையுடன் நடத்தப்படுகின்றனர்'
'துாய்மை பணியாளர்கள் மரியாதையுடன் நடத்தப்படுகின்றனர்'
ADDED : நவ 24, 2024 01:05 AM
'துாய்மை பணியாளர்கள்
மரியாதையுடன்
நடத்தப்படுகின்றனர்'
நாமக்கல், நவ. 24-
நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாநகராட்சி மேயர், துணைமேயர், கமிஷனர், சுகாதார அலுவலர் ஆகியோரின் வீடுகளுக்கும், அவர்களுக்கு சொந்தமான இடங்களுக்கும், மாநகராட்சியின் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் மற்றும் நிரந்தர துாய்மை பணியாளர்களை பயன்படுத்துவதில்லை.
ஒப்பந்த பணியாளர்களுக்கு, தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையாளர்களே விடுப்பு வழங்குவதில் மாநகராட்சி அலுவலர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. மேலும், பெண் துாய்மை பணியாளர்களிடம், மாநகராட்சி அலுவலர்கள் தகாத வார்த்தைகளில் பேசுவதில்லை. பெண் துாய்மை பணியாளர்கள் மிகவும் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப்பட்டு வருகின்றனர். சங்க மாநில தலைவர் சுந்தரமூர்த்தி, பொய்யான ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.