/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு போட்டி
/
அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு போட்டி
ADDED : ஜூலை 22, 2025 01:49 AM
ராசிபுரம், சென்னையை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லுாரி கல்வி குழுமம் சார்பில், ராசிபுரத்தில் அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், நாமக்கல்லை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினர். பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு, 62,000 ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
சேலம் மாவட்ட கல்வி அதிகாரி விஜயன், தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில், படிப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். முடிவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, நாமக்கல் மாவட்ட பள்ளிகளின் துணை ஆய்வாளர் பெரிய தம்பி பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை, கல்லுாரி பேராசிரியர்கள் குமார், ஆனந்தகுமார் செய்திருந்தனர்.