/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சோனியா பிறந்தநாள் காங்., கொண்டாட்டம்
/
சோனியா பிறந்தநாள் காங்., கொண்டாட்டம்
ADDED : டிச 10, 2024 01:42 AM
சோனியா பிறந்தநாள்
காங்., கொண்டாட்டம்
நாமக்கல், டிச. 10-
காங்., முன்னாள் தலைவர் சோனியாவின், 78வது பிறந்தநாள் விழா, நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் அறிவுறுத்தல்படி, நாமக்கல் மாநகர காங்., சார்பில் மோகனுார் சாலையில் உள்ள காந்திநகர், பாலதண்டாயுதபாணி கோவிலில் கொண்டாடப்பட்டது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
தொடர்ந்து, சோனியா பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாநகர தலைவர் மோகன் தலைமை வகித்தார்.
மாநில செய்தி தொடர்பாளர் செந்தில் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்று, கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரசாதம் வழங்கினர்.