/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதிய சார்பதிவாளர் கட்டடம் கட்டுமான பணிகள் துவக்கம்
/
புதிய சார்பதிவாளர் கட்டடம் கட்டுமான பணிகள் துவக்கம்
புதிய சார்பதிவாளர் கட்டடம் கட்டுமான பணிகள் துவக்கம்
புதிய சார்பதிவாளர் கட்டடம் கட்டுமான பணிகள் துவக்கம்
ADDED : நவ 26, 2024 01:53 AM
புதிய சார்பதிவாளர் கட்டடம்
கட்டுமான பணிகள் துவக்கம்
ராசிபுரம், நவ. 26-
ராசிபுரம் நகராட்சியில், கடந்த, 1885ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலக கட்டடம், அதன் உறுதி தன்மையை இழந்தது. இதையடுத்து, பழைய கட்டடத்தை இடித்து விட்டு, பொதுப்பணித்துறை சார்பில் புதிய கட்டடம் கட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. பழைய கட்டடத்தில் இயங்கி வந்த சார்பதிவாளர் அலுவலகம், மற்றொரு இடத்திற்கு கடந்த மே மாதம் மாற்றப்பட்டது. கடந்த, 3 மாதங்களாக ஒப்பந்த பணிகளுக்கான ஆயத்த பணிகள் நடந்தன. 1.35 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
பழைய கட்டடம் முழுமையாக இடித்து அப்புறப்படுத்தப்பட்ட பின் பில்லர் அமைப்பதற்கான குழி வெட்டும் பணி கடந்த, இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. நேற்று பில்லர் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கின.