/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேர்தல் அலுவலர்களுக்கு ஆலோசனை முகாம்
/
தேர்தல் அலுவலர்களுக்கு ஆலோசனை முகாம்
ADDED : அக் 29, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில், நேற்று முன்தினம், தேர்தல் நடத்தும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு ஆலோசனை முகாம் நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.
முகாமில், ஓட்டுச்சாவடியில் பின்பற்ற வேண்டிய நடைமுறை, பூத் ஏஜென்ட்களுக்கு உரிய வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டன. வாக்காளர்கள் இறப்பு, விலாசம் மாற்றம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. தாசில்தார் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரகாஷ், துணை தாசில்தார் செல்வராஜ், ஆர்.ஐ., புவனேஸ்வரி, வி.ஏ.ஓ.,க்கள் முருகன், செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

