ADDED : அக் 29, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், சேந்தமங்கலம், பச்சுடையாம்பட்டி ஊராட்சி, மண்மலை கிராமத்தை சேர்ந்தவர் சுவாமிநாதன், 50; விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கனிம கற்களை வெட்டி எடுப்பதாக, பச்சுடையாம்பட்டி வி.ஏ.ஓ., மோகனாதேவிக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து, சேந்தமங்கலம் போலீசில் அளித்த புகார்படி, எஸ்.ஐ., தமிழ்குமரன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு சட்டத்துக்கு விரோதமாக கற்களை வெட்டியது தெரியவந்தது. போலீசாரை கண்டதும், கற்களை வெட்டிக்கொண்டிருந்தவர்கள் சிதறி ஓடினர். போலீசார் துரத்தியதில், துறையூர் அடுத்த நரசிங்கபுரம் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த சுரேந்திரன், 21, எருமப்பட்டி அடுத்த தேவராயபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ், 37, ஆகிய இருவரை பிடித்து கைது செய்தனர்.

