/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதுச்சத்திரத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம்
/
புதுச்சத்திரத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம்
புதுச்சத்திரத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம்
புதுச்சத்திரத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம்
ADDED : பிப் 16, 2025 03:26 AM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியன் ஆபீசில், மகளிர் சுய உதவிக்குழுவின-ருக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. கலெக்டர் உமா தொடங்கி வைத்து பேசியதா-வது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும், பொரு-ளாதாரத்தில் பின்தங்கியவர்களிடையே நுகர்வோர் உரிமைகள், பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. அதன்படி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களைக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து யூனியன்க-ளிலும், 100 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்க பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக, மகளிர் திட்ட அலுவலர் மற்றும் பி.டி.ஓ.,க்களை கொண்டு ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்-பட்டுள்ளன. அதனடிப்படையில், இரு தன்னார்வ நுகர்வோர்க-ளுக்கு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து பயிற்சி வழங்கப்-பட்டது. தற்போது, அந்த பயிற்சியாளர்கள் மூலம் ஒவ்வொரு யூனியனிலும், தலா, 100 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கி வருகின்றனர். மகளிர் சுய உதவிக்குழுவினர் இந்த வகுப்புகளை பயன்படுத்திக்கொண்டு, பொதுமக்களி-டையே நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.