/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை
/
அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை
அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை
அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை
ADDED : மே 30, 2025 01:44 AM
ராசிபுரம், ராசிபுரம் நகராட்சியில் குடிநீர், தெருவிளக்கு பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ராசிபுரம் நகராட்சி நகரமன்ற கூட்டம் சேர்மன் கவிதா சங்கர் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் கோமதி ஆனந்த், நகராட்சி (பொறுப்பு) கமிஷனர் பிரேம் ஆனந்த் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் பேசுகையில், நகராட்சியில், தண்ணீர் முறையாக வினியோகம் செய்யப்பட வேண்டும். தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய் வளர்ப்பவர்கள், தங்கள் வீட்டில் கட்டி வைத்து வளர்க்க வேண்டும். பல்வேறு இடங்களில் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது, அவைகளை சரி செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதற்கு பதிலளித்து பேசிய சேர்மன் கவிதா சங்கர், 'உறுப்பினர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும். குறிப்பாக குடிநீர் பிரச்னை, தெருவிளக்கு பிரச்னைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.