/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வடிகால், வாட்டர் டேங்க் அமைக்க கோரி நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை
/
வடிகால், வாட்டர் டேங்க் அமைக்க கோரி நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை
வடிகால், வாட்டர் டேங்க் அமைக்க கோரி நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை
வடிகால், வாட்டர் டேங்க் அமைக்க கோரி நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை
ADDED : செப் 16, 2025 02:01 AM
குமாரபாளையம், குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில், நகர்மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜயகண்ணன் தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய நகர்மன்ற உறுப்பினர்கள், தங்கள் பகுதிகளில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்; சாலை அமைக்க வேண்டும்; பழுதடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். மேலும், மூன்றாவது வார்டு கவுன்சிலர் வேல்முருகன், தனது வார்டு பகுதி
யில் உள்ள நகராட்சி பள்ளி எதிரே குப்பை கிடங்கு அமைந்துள்ளது. அங்கிருந்து வெளியேறும் பாம்புகள், அடிக்கடி பள்ளிக்கு புகுந்து விடுகின்றன. எனவே, குப்பை கிடங்கை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக, நகர்மன்ற தலைவர் விஜயகண்ணன் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ''குமாரபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள, 33 நகர்மன்ற உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய கழிப்பிடம், சாக்கடை கால்வாய், சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை, அடுத்த நகர்மன்ற கூட்டத்திற்குள் கோரிக்கை மனுவாக வழங்க வேண்டும். அவற்றுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில், விரைவில் தேர்தல் வர உள்ளதால், மக்களை சந்தித்து ஓட்டு சேகரிக்க முடியாமல் போய்விடும்,'' என்றார். பின், நகராட்சி கூட்டத்தில், ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.