ADDED : நவ 18, 2026 06:31 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம்:குமாரபாளையத்தில்,
பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம்
நடந்தது. அதில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனே நிதி ஒதுக்க வேண்டும்.
நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிகளை முடக்க வேண்டாம். குடிநீரை
சுத்திகரிப்பு செய்து வினியோகம் செய்ய வேண்டும். தீபாவளி பட்டாசு
குப்பை, நகர் முழுதும் குவிந்துள்ளது, அவற்றை உடனே அகற்ற வேண்டும்.
நகராட்சிக்குட்பட்ட பழுதடைந்த பொது கழிப்பிடங்களை பராமரிப்பு
செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி
கோஷம் எழுப்பினர். நகர குழு செயலர் கந்தசாமி தலைமை வகித்தார்.
