/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'பெஞ்சல்' புயலால் மாவட்டத்தில் 3 நாளில் 1,096.80 மி.மீ., மழை
/
'பெஞ்சல்' புயலால் மாவட்டத்தில் 3 நாளில் 1,096.80 மி.மீ., மழை
'பெஞ்சல்' புயலால் மாவட்டத்தில் 3 நாளில் 1,096.80 மி.மீ., மழை
'பெஞ்சல்' புயலால் மாவட்டத்தில் 3 நாளில் 1,096.80 மி.மீ., மழை
ADDED : டிச 04, 2024 06:53 AM
நாமக்கல்: 'பெஞ்சல்' புயல் காரணமாக, நாமக்கல் மாவட்டம் முழுவதும், மூன்று நாட்களில், 1,096.80 மி.மீ., மழை பெய்துள்ளது.
வங்கக் கடலில் உருவான, 'பெஞ்சல்' புயல் காரணமாக, தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 30ல், காலை முதல் மாலை வரை விட்டு விட்டு துாறல் மழை பெய்தது. அதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அன்று இரவு முழுவதும் கனமழையும், லேசான மழையும் பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, கொல்லிமலையில் கனமழை பெய்தது. அதனால், பாறை விழுந்தும், மரங்கள் வேரோடு சாய்ந்தும், போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல், இரவிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால், நாமக்கல் அடுத்த காவேட்டிப்பட்டி ஏரி நிரம்பி, வள்ளிபுரம் பகுதியில் குடியிருப்பில் வெள்ளநீர் புகுந்தது. தொடர்ந்து, தான்தோன்றிஸ்வரர் கோவில் பகுதி வழியாக சர்வீஸ் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. அதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டூவீலரில் செல்பவர்கள் சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மாவட்டத்தில், நேற்று காலை, 6:00 மணி வரை, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ.,): எருமப்பட்டி, 15, குமாரபாளையம், 6.20, மங்களபுரம், 44.80, மோகனுார், 27, நாமக்கல், 14, ப.வேலுார், 1, புதுச்சத்திரம், 22, ராசிபுரம், 33, சேந்தமங்கலம், 11, திருச்செங்கோடு, 12.50, கலெக்டர் அலுவலகம், 10, கொல்லிமலை, 30 என, மொத்தம், 226.50 மி.மீ., மழை பெய்துள்ளது. கடந்த, 30ல், 441.80, 1ல், 428.50, நேற்று முன்தினம், 226.50 என, மூன்று நாட்களில், 1,096.80 மி.மீ., மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.