/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாலத்தில் 'சென்டர் மீடியன்' வைக்க முடிவு
/
பாலத்தில் 'சென்டர் மீடியன்' வைக்க முடிவு
ADDED : ஜூன் 20, 2025 01:48 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம், ஒன்பதாம்படி பகுதியில் இருந்து ஆலாம்பாளையம் வரை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து, திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம், திருச்சி உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் வாகனங்கள், இந்த மேம்பாலம் வழியாகத்தான் சென்று வருகின்றன. ஒன்பதாம்படி பகுதியில் மேம்பாலத்தில் ஏறும் வாகனங்கள், ஆலாம்பாளையம் பகுதியில் மேம்பாலத்தில் இருந்து இறங்கி, சாலை வழித்தடத்தில் செல்கின்றன. அவ்வாறு மேம்பாலத்தில் இருந்து வேகமாக வரும் வாகனங்களால், ஆலாம்பாளையம் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், திருச்செங்கோடு டி.எஸ்.பி., கிருஷ்ணன், போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விபத்தை தடுப்பதற்கான வழிகளை ஆய்வு செய்தனர். அப்போது, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், சீராக செல்லும் வகையிலும் மேம்பாலத்தின் மையப்பகுதியில் சென்டர் மீடியன் குறிப்பிட்ட துாரத்திற்கு வைக்க முடிவு செய்துள்ளனர்.