/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
/
தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 28, 2025 07:01 AM
நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில், நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டக்கிளை சார்பில், நாமக்கல் வட்டார கல்வி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சங்கர் தொடக்க உரையாற்றினார். மாநில பொருளாளர் முருக செல்வராசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில், தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி, ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழகரசு நிறைவேற்ற வேண்டும். டிட்டோஜாக் கூட்டு நடவடிக்கை குழுக்களின் கோரிக்கைகளை ஏற்று அரசாணை வெளியிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் வடிவேல் உள்ளிட்ட நாமக்கல், மோகனுார், எருமப்பட்டி, சேந்தமங்கலம், கொல்லிமலை, புதுச்சத்திரம் ஒன்றியங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.