/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துணை முதல்வர் பிறந்தநாள் இளைஞரணி நலத்திட்ட உதவி
/
துணை முதல்வர் பிறந்தநாள் இளைஞரணி நலத்திட்ட உதவி
ADDED : டிச 11, 2025 06:56 AM
நாமக்கல்: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநா-ளையொட்டி, கடந்த, இரண்டு வாரங்களாக மாவட்டம் முழுவதும், நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பல்வேறு நலத்-திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். ராசிபு-ரத்தில், ஆதரவற்றோருக்கு அன்னதானம் உள்-ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று சேந்தமங்கலம் டவுன் பஞ்., காந்திபுரம் வார்டு எண், 4, 6 ஆகிய பகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு வேட்டி, சேலை, சட்டை ஆகி-யவை வழங்கப்பட்டன.
கிழக்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை தலைவருமான ராஜேஸ்குமார் எம்.பி., ஆலோசனைப்படி, வார்டு செயலாளர்கள் சரவணன், குமார் ஆகியோர் முன்னிலையில், பேரூர் செயலாளர் தனபாலன், மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆனந்-தகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கார்த்திக், வார்டு செயலாளர்கள் சரவணன், குமாரசாமி, பேரூராட்சி உறுப்பி-னர்கள் ராணி, ராஜாமணி, ஒன்றிய பிரதிநிதி மோகன், பேரூர் இளைஞரணி துணை அமைப்-பாளர் ரபிக், மகளிர் அணி செல்வாம்பாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

