/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உலக மனித உரிமைகள் தினம் ஆபீசில் உறுதிமொழி ஏற்பு
/
உலக மனித உரிமைகள் தினம் ஆபீசில் உறுதிமொழி ஏற்பு
ADDED : டிச 11, 2025 06:55 AM

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், சர்வதேச மனித உரிமைகள் நாள் உறுதிமொழியை ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஆண்டு தோறும், டிச., 10ல், 'சர்வதேச மனித உரி-மைகள் நாள்' அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்-பட்டது.
கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்-மையினர் நலத்துறை கமிஷனருமான ஆசியா மரியம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று, சர்வ-தேச மனித உரிமைகள் தின உறுதிமொழியை ஏற்றனர்.
டி.ஆர்.ஓ., சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, தனி டி.ஆர்.ஓ., கண்ணன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

