ADDED : அக் 11, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: எம்.மேட்டுப்பட்டி, பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு திட்டப்பணிகள் குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், எம்.மேட்டுப்பட்டியில் உள்ள, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், 10 லட்சம் மதிப்பில் ஆழ்த்துளை கிணறு மற்றும் ரூ.2.85 லட்சம் மதிப்பில் கழிப்பிடம் கட்டும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து, எம்.எல்.ஏ., சேகர் முன்னிலையில், ப.வேலுார் வட்டம், பிலிக்கல்பாளையத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம், பாலம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

