/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி தர்ணா
/
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி தர்ணா
ADDED : நவ 16, 2024 01:25 AM
புதிய ஓய்வூதிய திட்டத்தை
ரத்து செய்யக்கோரி தர்ணா
நாமக்கல், நவ. 16-
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர், நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் குப்பண்ணன் தலைமை வகித்தார்.
அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வு கால பணப்பயன்களை வழங்க வேண்டும். 2003க்கு பின் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, ஒப்பந்த பணிக்காலத்தை கணக்கில் கொண்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை, வாரியமே நடத்த வேண்டும். விதவை, விவாகரத்தானவர்களுக்கு வழங்கி வந்த ஓய்வூதியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். கரூர் கிளை செயலாளர் கந்தசாமி, ஈரோடு மண்டல செயலாளர் காளியப்பன், அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.