/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பயன்பாட்டிற்கு வராத கழிப்பறையால் அவஸ்தை
/
பயன்பாட்டிற்கு வராத கழிப்பறையால் அவஸ்தை
ADDED : செப் 29, 2025 01:57 AM
ராசிபுரம்;ராசிபுரத்தில் இருந்து மோகனுார் வரை தொழிற்வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ராசிபுரத்தில் இருந்து நாமக்கல் வரை சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. சிங்களாந்தபுரம், பேளுக்குறிச்சி, காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், முத்துகாப்பட்டி உள்ளிட்ட பகுதிக்குள் செல்லாமல் புறவழிச்சாலையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை முழுவதும் சோலார் மற்றும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி முக்கிய பஸ் நிறுத்தங்களில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு தண்ணீர் சப்ளை செய்ய நிழற்கூடங்களின் மேல் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு தண்ணீரை யார் வினியோகிப்பார்கள் என்று குறிப்பிடவில்லை. சின்டெக்ஸ் டேங்கிற்கு தண்ணீர் வழங்காததால் கழிவறைகள் பயன்படுத்தாமல் பூட்டிய நிலையிலேயே உள்ளன.
கழிவறைகள் கட்டியும் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. எனவே, இந்த சாலையில் உள்ள கழிவறைகளுக்கு தண்ணீர் முறைப்படி வினியோகம் செய்து கழிவறைகளை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.