/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம்

ADDED : டிச 31, 2025 05:58 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்-காணிப்பு குழு (திசா) கூட்டம் நடந்தது. குழு தலைவர் எம்.பி., மாதேஸ்வரன் தலைமை வகித்தார். உறுப்பினர் செயலரும், கலெக்டரு-மான துர்கா மூர்த்தி, நாமக்கல் எம்.எல்.ஏ., ராம-லிங்கம், திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், மத்திய அரசு திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வேளாண், மாவட்ட இயக்க மேலாண் அலகு, நக-ராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் முன்-னேற்றம் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.'பணிகள் அனைத்தும் திட்ட வழிகாட்டி நெறிமு-றைகள்படி தரமாகவும், குறித்த நேரத்திலும் முடிக்கப்பட வேண்டும்' என, குழுவின் தலைவர் மாதேஸ்வரன் எம்.பி., அறிவுறுத்தினார். டி.ஆர்.ஓ., சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், ஆர்.டி.ஓ.,க்கள் சாந்தி, லெனின், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.