/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வட்ட அளவிலான தடகள போட்டி: மோகனுார் அரசு பள்ளி சாம்பியன்
/
வட்ட அளவிலான தடகள போட்டி: மோகனுார் அரசு பள்ளி சாம்பியன்
வட்ட அளவிலான தடகள போட்டி: மோகனுார் அரசு பள்ளி சாம்பியன்
வட்ட அளவிலான தடகள போட்டி: மோகனுார் அரசு பள்ளி சாம்பியன்
ADDED : செப் 04, 2024 09:30 AM
மோகனுார்: மோகனுார் வட்ட அளவிலான தடகள விளை-யாட்டு போட்டி, அணியாபுரம் அரசு மேல்நி-லைப்பள்ளியில் நடந்தது. அதில், அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.
அதில், மோகனுார் அரசு மாதிரி மகளிர் மேல்நி-லைப்பள்ளி மாணவியர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, சாதனை படைத்தனர். 14 வய-துக்குட்பட்டோர் பிரிவில், இப்பள்ளி மாணவி கனிமொழி, உயரம் தாண்டும் போட்டியில் முத-லிடம், மாணவி தேவிகாஸ்ரீ, 600 மீ., ஓட்டத்தில் முதலிடம், நீளம் தாண்டும் போட்டியில், இரண்-டாமிடம் பிடித்தனர்.
மாணவி தக் ஷனா, -நீளம் தாண்டுதல் போட்-டியில் முதலிடம், தயாழினி, 80 மீ., தடை ஓட்-டத்தில் முதலிடம், தர்ஷனாஸ்ரீ-, 200 மீ., ஓட்டம், 80 மீ., தடை ஓட்டம், 600 மீ., ஓட்டத்தில், மூன்றா-மிடம் பிடித்தார். தேவிகாஸ்ரீ, கனிமொழி, தக் ஷனா, தர்ஷனாஸ்ரீ ஆகியோர், 400 மீ., தொடர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்தனர். 17 வயதுக்குட்-பட்டோர் பிரிவில், மாணவி கலையரசி, ஈட்டி எறியும் போட்டியில் முதலிடம், கார்த்திகா, 800 மீ., 1,500 மீ., 3,000 மீ., ஓட்டத்தில் முதலிடம், கனிஷ்கா, உயரம் தாண்டும் போட்டியில் முத-லிடம், நீளம் தாண்டும் போட்டியில், இரண்டா-மிடம் பிடித்தனர்.மாணவி தாராகுமாரி, நீளம் தாண்டுதலில்,- முதலிடம், 100 மீ., 200 மீ., ஓட்-டத்தில் இரண்டாமிடம், 400 மீ., தொடர் ஓட்-டத்தில், மாணவியர் கார்த்திகா, பிரித்திஷா, தாராகுமாரி, கனிஷ்கா ஆகியோர், இரண்டாமிடம் பிடித்தனர்.
மேலும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், மாணவி சாஷினி, 800 மீ., 1,500 மீ., 3,000 மீ., ஓட்-டத்தில் முதலிடம், கிருபாஷாலினி, நீளம் தாண்டுதல், 400 மீ., தடை தாண்டும் ஓட்டம், 400 மீ., ஓட்டத்தில் முதலிடம் பிடித்தார். மாணவியர் தீபலோசினி, வசுந்தரா, ரித்திகா, கிருபாசாலினி ஆகியோர், 400 மீ., தொடர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்தனர். அதில், மாணவியர் கார்த்திகா, கிரு-பாஷாலினி ஆகியோர் தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
இப்பள்ளி, 153 புள்ளிகள் பெற்று, ஏழாவது முறை-யாக ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளது. வெற்றி பெற்ற மாண-வியரை, தலைமையாசிரியர் கலைச்செல்வி, உதவி தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன், கணினி ஆசிரியர் பிரபாகரன், தமிழாசிரியர் வீர-ராகவன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வி, ராதிகா, பாரதி, தீபக் மற்றும் ஆசிரியர்கள் பாராட்-டினர்.