/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'போதை பொருள் கடத்தலுக்கு தி.மு.க., - வி.சி., கட்சி உடந்தை'
/
'போதை பொருள் கடத்தலுக்கு தி.மு.க., - வி.சி., கட்சி உடந்தை'
'போதை பொருள் கடத்தலுக்கு தி.மு.க., - வி.சி., கட்சி உடந்தை'
'போதை பொருள் கடத்தலுக்கு தி.மு.க., - வி.சி., கட்சி உடந்தை'
ADDED : மார் 11, 2024 06:52 AM
நாமக்கல் : ''போதை பொருள் கடத்தலுக்கு தி.மு.க., மற்றும் வி.சி., கட்சியினர் உடந்தையாக உள்ளனர்,'' என்று, மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.
நாமக்கல்லில் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கட்டப்பஞ்சாயத்து கட்சி, ஊழல் கட்சி, குடும்ப கட்சி என்ற நிலையில் இருந்து, போதைப்பொருள் கடத்தல் கட்சியாக தி.மு.க., மாறி விட்டது. தி.மு.க., முக்கிய நிர்வாகி ஒருவர், 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தியது தெரிய வந்துள்ளது. கடந்த, 60 ஆண்டுகளாக தி.மு.க., தமிழகத்தை சீரழித்து விட்டது. கடந்த மூன்றாண்டுகளில் வளர்ச்சி திட்டங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கவில்லை.
நாமக்கல் மாவட்டத்தில், பா.ஜ., நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைத்து லோக்சபாவுக்கு அனுப்ப வேண்டும். 'என் மண், என் மக்கள்' யாத்திரை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.
மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கியதால்தான், போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 'இண்டியா' கூட்டணியில் உள்ள நபர்கள், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைதாகி உள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து கடத்தப்படும் போதை பொருட்களை, குஜராத் மாநில போலீசார் விழிப்புடன் இருந்து பறிமுதல் செய்கின்றனர். போதை பொருள் கடத்தலுக்கு தி.மு.க., - வி.சி., கட்சியினர் உடந்தையாக உள்ளனர்.
பா.ஜ., வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். புதிதாக இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில், நாமக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கோடி மக்களிடம் வளர்ச்சி அடைந்த பாரதம், நமது லட்சியம் குறித்து தேர்தல் விஷன் டாக்குமெண்ட் பா.ஜ., தயாரிக்க உள்ளது. அதற்காக, ஒரு கோடி மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, ராஜேஷ்குமார் உடனிருந்தனர்.

