/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லாரியில் இறந்த டிரைவர் ஜி.பி.எஸ்., மூலம் மீட்பு
/
லாரியில் இறந்த டிரைவர் ஜி.பி.எஸ்., மூலம் மீட்பு
ADDED : செப் 09, 2025 02:40 AM
வெண்ணந்துார், ; குமாரபாளையம், கே1 பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 58; லாரி டிரைவர். இவரது மனைவி சசி, 45; தம்பதியருக்கு கிருத்திகா, 33, சவுந்தர்யா, 29, ஆகிய, இரண்டு மகள்கள் உள்ளனர். பழனிசாமி, மஹாராஷ்டிரா மாநிலம், ஜோலாப்பூரில் இருந்து நெல் லோடு ஏற்றிக்கொண்டு, நாமக்கல் பகுதியில் இறக்குவதற்காக வந்துள்ளார். இந்நிலையில், ஆட்டையாம்பட்டி பிரிவு ரோட்டில், நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு தன் குடும்பத்தினருடன் மொபைல் போனில் பேசியுள்ளார்.
பின், மீண்டும் குடும்பத்தினர் தொடர்புகொண்டபோது, அவர் மொபைல் போனை எடுக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர், லாரி ஓனரிடம் விசாரித்துள்ளனர். அவர், லாரி நிற்கும் இடத்தை ஜி.பி.எஸ்., மூலம் கண்டறிந்துள்ளார். பின், குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, பழனிசாமி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வெண்ணந்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.