ADDED : செப் 07, 2025 12:45 AM
ராசிபுரம் :பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்க கோரி போதை கணவர் தற்கொலை மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், குகை பகுதியை சேர்ந்தவர் சிவா, 30; கூலித்தொழிலாளி. இவருக்கும், நாமக்கல் செல்லப்பா காலனியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். சில வாரங்களுக்கு முன் கருத்துவேறுபாடு காரணமாக, மனைவி பிரிந்து தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார்.
நேற்று முன்தினம் இரவு, சிவா புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மதுபோதையில் சென்றுள்ளார். அங்கு, பிரிந்து சென்ற தன் மனைவியை சேர்த்துவைக்குமாறு கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். சிவாவை சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பிவைத்தனர்.
சிறிது நேரம் கழித்து வந்த சிவா, போதை அதிகமாகவே போலீஸ் ஸ்டஷன் அருகே உள்ள, இரண்டு மாடி கட்டடத்தில் ஏறி ரகளையில் ஈடுபட்டார்.
என் மனைவியை சேர்த்துவைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துவிடுவேன் என, மிரட்டல் விடுத்தார். 45 நிமிடம் நடந்த ரகளையில் போலீசார் சமரசம் பேசி, சிவாவை கீழே இறங்க வைத்தனர். பின் எச்சரித்து சிவாவை அனுப்பி வைத்தனர்.