UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 11:06 PM
அ நிறம் | அளவு
நாமக்கல்: தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 6.40 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், அதன் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 6.30 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை கொள்முதல் விலை, 10 காசு உயர்த்தி, 6.40 காசாக நிர்ணயம் செய்யப் பட்டது.
தமிழகத்தில், புராட்டாசி விரதம் முடிந்தபின், தேவை அதிகரிப்பு காரணமாக, முட்டை கொள்முதல் விலை ஏறுமுகத்தில் உள்ளது. அதனால், 5 நாட்களில், 70 காசு அதிகரித்துள்ளது. இதனால், பண்ணை யாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
