/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மையங்களில் வாக்காளர் பெயர் பட்டியல் சிறப்பு
/
மையங்களில் வாக்காளர் பெயர் பட்டியல் சிறப்பு
ADDED : நவ 17, 2024 02:12 AM
மாவட்டத்தில் 1,629 ஓட்டுச்சாவடி திருத்த முகாம்
நாமக்கல், நவ. 17-
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த அக்., 29ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ராசிபுரம் (எஸ்.சி.,), சேந்தமங்கலம் (எஸ்.டி.,), நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய, 6 சட்டசபை தொகுதிகளில், ஆண் வாக்காளர்கள், 7,01,538, பெண் வாக்காளர்கள், 7,47,234, மற்றவர்கள், 246 என, மொத்தம், 14,49,018 வாக்காளர்கள் உள்ளனர்.தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம், நாமக்கல் மாவட்டத்தில், நேற்று, இன்று, வரும், 23, 24 என, சனி, ஞாயிறு ஆகிய, 4 நாட்கள், 1,629 ஓட்டுச்சாவடி மையங்களிலும் நடக்கிறது. இந்த சிறப்பு சுருக்க முறை திருத்தத்தில், வரும், 2025 ஜன., 1ல், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளாதவர்கள், தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கலாம்.
மேலும், புகைப்படம், குடியிருப்பு முகவரி திருத்தம் செய்தல், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெற உரிய விண்ணப்பங்களில் பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி மையங்களில் அளிக்கலாம். அதேபோல், 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும், அதாவது, 2007 செப்., 30 வரை பிறந்தவர்கள், வரும், 2025 ஏப்., 1, ஜூலை, 1, அக்., 1ல் ஆகிய காலாண்டு தேதிகளில், தகுதி நாளாக கொண்டு, 18 வயதை பூர்த்தி அடையும் நபர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம். அவர்களது பெயர், 18 வயது நிரம்பியவுடன் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். நாமக்கல் மாவட்டத்தில், நேற்று துவங்கிய சிறப்பு திருத்த முகாமை, கலெக்டர் உமா ஆய்வு செய்தார்.