தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 07, 2024 12:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 12:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: 'கேங்மேன்'களை கள உதவியாளர்களாக பணி மாற்றம் செய்யக்கோரி நாமக்கல்லில், மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக மின் ஊழியர் மத்திய அமைப்பின் மின்பகிர்மான வட்ட கிளை சார்பில், நாமக்கல் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திட்டத்தலைவர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். அதில், 'கேங்மேன்' பணியாளர்களை கள உதவியாளர்களாக பணிமாற்றம் செய்ய வேண்டும். 'கேங்மேன்' பணியாளர்களுக்கு இடமாறுதல், 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

விடுபட்ட, 'கேங்மேன்' பணியாளர்களுக்கு பணி உத்தரவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

துணைத்தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் கோவிந்தராசு உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us