/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும்
/
18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும்
18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும்
18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும்
ADDED : டிச 31, 2024 07:27 AM

நாமக்கல்: ''பதினெட்டு வயது நிரம்பிய அனைவரும் விடுபடாத வகையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும்,'' என, தமிழக உப்பு கழக மேலாண் இயக்குனர் மகேஸ்வரன் பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025' குறித்து அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா முன்னிலை வகித்தார். வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழக உப்பு கழகம் மேலாண் இயக்குனருமான மகேஸ்வரன் தலைமை வகித்து பேசியதாவது:இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகள், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க, இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும், வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை நியமித்துள்ளனர். 18 வயது நிரம்பிய அனைவரும் விடுபடாத வகையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும். இறந்தவர்களின் பட்டியலை பெற்று, அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையம், தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், 80 வயதிற்கு மேற்பட்ட வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, அவர்களது இல்லங்களுக்கு நேரடியாக சென்று ஓட்டுப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்டம் கடந்த தேர்தல்களில் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி ஓட்டுப்பதிவை சிறப்பாக மேற்கொண்டுள்ளது. பிற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் பொதுமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விதமான அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டு, பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். டி.ஆர்.ஓ., சுமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்தியா அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.