ADDED : அக் 31, 2026 06:22 AM
அ நிறம் | அளவு
மல்லசமுத்திரம்,:ஈரோடு
மாவட்டம், வெங்கம்பூர் டவுன் பஞ்.,ல் பணியாற்றிய செல்வகுமார், பதவி
உயர்வு பெற்று மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,ல், செயல் அலுவலராக
பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு டவுன் பஞ்., தலைவர் திருமலை, உப
தலைவர் மனோரஞ்சிதம், வார்டு கவுன்சிலர்கள், சக ஊழியர்கள், பொதுமக்கள்
சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இங்கு செயல்
அலுவலராக பணியாற்றிய மூவேந்திரபாண்டியன், பணி மாறுதல் பெற்று கோவை
மாவட்டம், இடிகரை டவுன் பஞ்.,ல், நேற்று செயல் அலுவலராக
பொறுப்பேற்றுக்கொண்டார்.
