/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பா.ஜ., தமிழக தலைவரை வரவேற்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
பா.ஜ., தமிழக தலைவரை வரவேற்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
பா.ஜ., தமிழக தலைவரை வரவேற்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
பா.ஜ., தமிழக தலைவரை வரவேற்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 01, 2025 01:27 AM
ராசிரம், 'தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்' என்ற பெயரில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நாமக்கல் மாவட்டத்திற்கு, நவ., 4ல் வரவுள்ளார். இதையொட்டி, மாவட்டம் முழுவதும் இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் செய்து வருகிறார்.
மாநில துணைத்தலைவரும், ராசிபுரம் சட்டசபை பொறுப்பாளருமான துரைசாமி, தொகுதி முழுவதும் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். நேற்று, நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் கண்ணன், மத்திய அரசு நலத்திட்டப்பிரிவின் மாநில துணை அமைப்பாளர் லோகேந்திரன், சட்டசபை அமைப்பாளர் முத்துக்குமார், இணை அமைப்பாளர் தமிழரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
சக்தி கேந்திர பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். கூட்டத்திற்கு செல்ல வாகனங்கள் பதிவு செய்வது; தொண்டர்களை எவ்வாறு அழைத்து வருவது; எந்த இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்; எந்தெந்த பகுதிகளில் நிற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆலோசனை செய்தனர்.

