/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
யோகா பயிற்சியாளர் பணிக்கு வரும் 3ல் நேர்முகத்தேர்வு
/
யோகா பயிற்சியாளர் பணிக்கு வரும் 3ல் நேர்முகத்தேர்வு
யோகா பயிற்சியாளர் பணிக்கு வரும் 3ல் நேர்முகத்தேர்வு
யோகா பயிற்சியாளர் பணிக்கு வரும் 3ல் நேர்முகத்தேர்வு
ADDED : நவ 01, 2025 01:26 AM
நாமக்கல், :'நாமக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில், யோகா பயிற்சியாளர் பணிக்கு வரும், 3ல் நேர்முகத்தேர்வு நடக்கிறது' என, கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் யோகா வகுப்புகள் நடந்து வருகிறது. இதற்கு மாதம், 300 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. யோகா பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதிகளாக, தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையால் வழங்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை அறிவியல் இளங்கலை பட்டம் அல்லது யோகா மற்றும் இயற்கை அறிவியல் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். யோகா வகுப்புகள் காலை, 6:00 மணி முதல், 8:15 மணி வரை மற்றும் மாலை, 4:00 மணி முதல், 6:15 மணி வரை, 4 அமர்வுகள் நடத்தப்படும்.
தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர்கள் தங்களுடைய பயோடேட்டா மற்றும் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகலுடன் வரும், 3 மாலை, 4:00 மணிக்கு, நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலத்திற்கு நேரில் வந்து தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

