/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எம்.பி.,ராஜேஸ்குமார் முயற்சியால் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் கோழிகளுக்கு விலக்கு
/
எம்.பி.,ராஜேஸ்குமார் முயற்சியால் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் கோழிகளுக்கு விலக்கு
எம்.பி.,ராஜேஸ்குமார் முயற்சியால் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் கோழிகளுக்கு விலக்கு
எம்.பி.,ராஜேஸ்குமார் முயற்சியால் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் கோழிகளுக்கு விலக்கு
ADDED : ஏப் 03, 2024 07:44 AM
வெண்ணந்துார் : வெண்ணந்துார் ஒன்றியம், அனந்தகவுண்டம்பாளையம் கோழிப்பண்ணையில், முட்டைகள் சேகரித்து அங்கு பண்ணை உரிமையாளர் மற்றும் பணிபுரியும் தொழிலாளர்களிடம் இண்டியா கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனுக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட செயலாளருமான ராஜேஸ்குமார் எம்.பி., மற்றும் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் ஓட்டு சேகரித்தனர்.
தொடர்ந்து ராஜேஸ்குமார் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய தொழிலாக கோழி பண்ணை தொழிலும், அதை சார்ந்த முட்டை உற்பத்தி தொழிலும் உள்ளது. மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணைகள் மூலமாக நாள் ஒன்றுக்கு, 7.50 கோடி அளவுக்கு முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற முட்டை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு முட்டை ஏற்றுமதி மையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது நாமக்கல் மாவட்டத்திற்கு ஒரு வரப்பிரசாதம்.
சென்ற ஆண்டு, ஒன்றிய அரசின் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சகம், கோழியை விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அப்போது நாடாளுமன்றத்தில் நேரமில்லா நேரத்தில் நான் பேசுகையில், கோழியை பாதுகாப்பாக வளர்த்து வருவதால், கோழியை விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் கொண்டு வரக்கூடாது என வலியுறுத்தி பேசினேன். அப்போதே ஒன்றிய கால்நடை துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா அவர்கள், கோழிகளை விலங்குகள்
வதை சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படாது என்று உறுதியளித்தார். இவ்வாறு கூறினார்.
ஒன்றிய செயலர் துரைசாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சத்யசீலன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

