/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறு: கழுத்தை இறுக்கியதில் விவசாயி சாவு
/
முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறு: கழுத்தை இறுக்கியதில் விவசாயி சாவு
முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறு: கழுத்தை இறுக்கியதில் விவசாயி சாவு
முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறு: கழுத்தை இறுக்கியதில் விவசாயி சாவு
ADDED : நவ 21, 2024 01:21 AM
சேந்தமங்கலம், நவ. 21-
மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட முன்விரோத தகராறில், கயிற்றால் கழுத்தை இறுக்கியதில் விவசாயி உயிரிழந்தார்.
கொல்லிமலை, அரியூர் நாடு பஞ்., அரியூர் கஸ்பா கிராமத்தை சேர்ந்தவர் தீவிழிராஜன், 48; விவசாயி. இவருக்கு விஜயா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் சின்னக்குழந்தை, 65. இவருக்கும், தீவிழிராஜனுக்கும் விவசாய நிலம் தொடர்பாக பிரச்னை இருந்தது. இதனால், இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தீவிழிராஜன் மது குடித்துவிட்டு, போதையில் அந்த வழியாக சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சின்னக்குழந்தைக்கும், தீவிழிராஜனுக்கும் தகராறு ஏற்பட்டது. பின் கைகலப்பாக மாறி இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
அப்போது மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த கயிற்றை எடுத்த சின்னக்குழந்தை, தீவிழிராஜன் கழுத்தை இறுக்கியுள்ளார். அங்கிருந்தவர்கள், இருவரையும் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தபோது, தீவிழிராஜன் மயங்கி கிழே விழுந்தார்.
அவரை மீட்டு, கொல்லிமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், தீவிழிராஜன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். செம்மேடு போலீசார், சின்னக்குழந்தையை கைது செய்து விசாரிக்கின்றனர்.

