/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற அழைப்பு
/
விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற அழைப்பு
விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற அழைப்பு
விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற அழைப்பு
ADDED : அக் 15, 2024 07:00 AM
நாமக்கல்: 'விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், 2024-25ம் ஆண்டு, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், சிறப்பு மற்றும் ரபி பருவத்தில், 'அக்ரிகல்சர் இன்சூரன்ஸ்' என்ற நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது, நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு பருவத்தில், சம்பா நெல் மற்றும் சிறிய வெங்காயம் பயிர்களும், ரபி பருவத்தில் பாசிப்பயறு, உளுந்து, நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், பருத்தி, கரும்பு, தக்காளி, மரவள்ளி மற்றும் வாழை பயிர்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், சிறப்பு பருவத்தில் சம்பா நெல் பயிருக்கு பிரீமிய தொகையாக, ஏக்கருக்கு, தலா, 549.82 ரூபாய், வரும் டிச., 16க்குள், தோட்டக்கலை பயிரான சிறிய வெங்காயம் பயிருக்கு, பிரீமிய தொகையாக, ஏக்கர் ஒன்றுக்கு, 2,050.10 ரூபாயை, வரும் நவ., 30க்குள் செலுத்த வேண்டும். மேலும், ஒவ்வொரு பயிருக்கும் அதற்கான பிரீமிய தொகையும், அதை செலுத்துவதற்கான கடைசி நாளும் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு, பயிர் கடன் பெறா விவசாயிகள் இ-சேவை மையங்களிலோ, தேசிய பயிர் இன்சூரன்ஸ் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம்.விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது வி.ஏ.ஓ.,விடம் தேவையான சான்றுகளைப் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும். இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு, பயிர் இன்சூரன்ஸ் இணையதளம் அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண் அலுவலகம், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.