/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : டிச 27, 2025 05:32 AM
நாமக்கல்; நாமக்கல் கலெக்டர் துர்கா வெளியிட்ட செய்-திக்குறிப்பு:
டிச., மாதத்திற்கான, மாவட்ட அளவிலான விவ-சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஆபீசில் வரும், 31 மாலை, 3:00 மணிக்கு நடக்கி-றது. கூட்டத்தில் வேளாண் இடு பொருள் இருப்பு விபரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில், விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்-கைகளையும் தெரிவித்து பயன்பெறலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கார் மோதி முதியவர் பலிவெண்ணந்துார்; வெண்ணந்துார் அடுத்த அத்தனுார் அருகே உள்ள ஆயிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி, 65; இவர், நேற்று இரவு, சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, அத்தனுார் பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சா-லையை கடக்க முயன்றார். அப்போது, நாமக்கல் பகுதியில் இருந்து சேலம் நோக்கி அதிவேகத்தில் சென்ற அடையாளம் தெரியாத கார், இவர் மீது மோதியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே மணி இறந்தார். இதுகுறித்து, வெண்ணந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

