/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பூக்கள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
/
பூக்கள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : செப் 30, 2025 01:41 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார், பொன்பரப்பிப்பட்டி, கோம்பைக்காடு, குட்டலாடம்பட்டி, தேங்கல்பாளையம், கட்டனாச்சம்பட்டி பகுதியில் அரளி பூ சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இங்கு அறுவடை செய்யும் பூக்களை, சேலம், நாமக்கல் பகுதிகளில் செயல்படும் பூ சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். சில வாரங்களுக்கு முன் சந்தையில், ஒரு கிலோ அரளி, 100 ரூபாய் முதல், 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாளை ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை போன்ற விசேஷ தினங்கள் உள்ளதால் பூக்கள் தேவையும் அதிகரித்துள்ளது. அதனால், பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அரளி ஒரு கிலோ, 340 ரூபாய், நந்தியாவட்டம், 200, சம்பங்கி, 140, சாதா சம்பங்கி, 160, மல்லி, 700, முல்லை, 500, ஜாதிமல்லி, 320, காக்கட்டான், 360, கலர்காக்கட்டான், 320, மலை காக்கட்டான், 360, ஏற்காடு மலை காக்கட்டான், 360 என பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால், பூ விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.