/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பணி பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி ஆசிரியர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
/
பணி பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி ஆசிரியர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
பணி பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி ஆசிரியர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
பணி பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி ஆசிரியர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 26, 2024 02:15 AM
நாமக்கல்: 'ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்' என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியு-றுத்தி, நாமக்கல்லில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்ட-மைப்பினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் ராமு தலைமை வகித்தார். அதில், ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும். எமீஸ் உள்ளிட்ட கற்பித்தல் சாராத பணிகளில் இருந்து, அனைத்து நிலை ஆசிரியர்களையும் முழுமையாக விடுவிக்க வேண்டும். மாணவர்கள்
முன் ஆசிரியரை விருப்ப ஓய்வில் செல்ல அறிவுறுத்திய விருதுநகர் மாவட்ட கலெக்டர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் தவறு செய்யும் மாணவர்களை கண்டிப்பதற்கான நெறிமுறைகளை வகுத்து, அரசாணை வெளியிட வேண்டும் என்-பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்
எழுப்பினர்.இதில், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசி-ரியர் கழக மாநில தணிக்கையாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் மலர்க்கண்ணன், தமிழக
பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாநில பொதுச்செயலாளர் செந்தில், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மதியழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.