/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை
/
அரசு பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை
ADDED : செப் 24, 2024 01:27 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த ஈ-காட்டூர் பகு-தியில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில், நேற்று வெப்படை தீயணைப்பு நிலையம் சார்பில், நிலைய அலுவலர் செங்குட்வேலு தலைமையில் தீய-ணைப்பு வீரர்கள், தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்-சியை மாணவர்களுக்கு நடத்தி காட்டினர்.
இதில், தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது, தப்பிப்பது, தீயை எளிதில் எப்படி அணைப்பது, தீ மீட்பு பணி உள்ளிட்-டவை குறித்து செயல்முறை விளக்கம், வடகிழக்கு பருவமழை விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, வெப்படை பகுதியில் உள்ள கைத்தறி நெசவு இணை இயக்குனர் அலுவல-கத்தில் உள்ள அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.