ADDED : நவ 24, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதா-னத்தில், மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் செல்லப்பன் நினைவு தினத்தையொட்டி, பள்ளிகளுக்கு இடையி-லான, 11வது கால்பந்து போட்டி, நேற்று தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களுக்கான முதல் நாள் போட்டியில், 11 பள்ளிகள் பங்கேற்றன.
இரண்டாம் நாள் போட்டி, வரும், 30ல் நடக்கிறது. இதில், வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, நான்காம் பரிசாக சுழற்கோப்பை வழங்கப்படுகி-றது. அதேபோல் சிறந்த கோல்கீப்பர், சிறந்த விளையாட்டு வீரர்க-ளுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர். ஏற்படுகளை நாமக்கல் மாவட்ட கால்பந்து கழகத்தினர் செய்துள்ளனர்.

