/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்: 87 பேர் பங்கேற்பு
/
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்: 87 பேர் பங்கேற்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்: 87 பேர் பங்கேற்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்: 87 பேர் பங்கேற்பு
ADDED : டிச 09, 2025 05:18 AM
மோகனுார்: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 21 முதல், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்து வருகிறது. அதன்படி, மோகனுார் ஒன்றியத்தில் உள்ளடக்கிய கல்வித்திட்டம் 2025-26 கல்வி ஆண்டிற்கான, மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம், வட்டார வளமையத்தில் நடந்தது.
மாவட்ட உதவி திட்ட அலுவலர் அருள்தாஸ் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் கவுரி, மேற்பார்வையாளர் பாலுசாமி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நீதிராஜா, வட்டார ஒருங்கிணைப்பாளர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த முகாமில், 87 பேர் பங்கேற்று பயன்பெற்றனர். அவர்களுக்கு, மனநலம், குழந்தைகள் நலம், கண், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரை வழங்கினர்.
மேலும், இரண்டு பேருக்கு, புதிய அடையாள அட்டை, 4 பேருக்கு அடையாள அட்டை புதுப்பித்தல், 6 பேருக்கு, யு.டி.ஐ.டி., பதிவு, 5 பேருக்கு, உதவி உபகரணங்கள் வழங்க பதிவு, 3 பேருக்கு, மாத பராமரிப்பு உதவி தொகை, 16 பேருக்கு பஸ் பாஸ் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. ஆசிரியர் பயிற்றுனர்கள் ராதிகா, விஜயா, பிரேமலதா, சிறப்பு பயிற்றுனர்கள் மீனா, உமாதேவி, செல்வராணி, செந்தமிழ்செல்வி, வனிதா, இயன்முறை மருத்துவர் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

