/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உயிரிழந்த 154 பேரின் குடும்பத்தினருக்கு நிதி
/
உயிரிழந்த 154 பேரின் குடும்பத்தினருக்கு நிதி
ADDED : நவ 29, 2025 01:40 AM
வெண்ணந்துார், நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், உயிரிழந்த, தி.மு.க., உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு, குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர், வெண்ணந்துார் ஒன்றிய பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், 154 கட்சியினரின் குடும்பத்தினருக்கு, தலா, 10,000, என, 15 லட்சத்து, 40,000 ரூபாய் நல உதவி வழங்கினார். முன்னதாக, இறந்தவர்களுக்கு, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
வெண்ணந்துார் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூர் செயலாளர்கள், வெண்ணந்துார் ராஜேஷ், அத்தனுார் கண்ணன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

