/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுார் வாரச்சந்தையில் மக்களின்றி 'வெறிச்' குத்தகைதாரர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

ADDED : நவ 29, 2025 01:40 AM
ப.வேலுார், நப.வேலுார் வாரச்சந்தைக்கு மக்கள் வராததால், வெறிச்சோடி காணப்பட்டது. வியாபாரம் இல்லாததால், சுங்க கட்டணம் தரமறுத்த வியாபாரிகள், குத்தகைதாரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார், சுல்தான்பேட்டை வாரச்சந்தை, ஞாயிறுதோறும் நடந்து வந்தது. இங்கு, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரம் செய்து வந்தனர். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வர். இந்நிலையில், நாளை, சந்தை வளாகம் அருகே உள்ள காந்தி நகரில், தன்னாசிப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடக்கிறது. அப்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், நேற்று வாரச்சந்தை செயல்படும் என, ப.வேலுார் டவுன் பஞ்., மற்றும் குத்தகைதாரர்கள் மூலம், 'தண்டோரா' போட்டு, தேதி மாற்றம் குறித்து மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று மதியம், 12:00 மணி வரை, பத்துக்கு மேற்பட்ட வியாபாரிகள் மட்டுமே சந்தைக்கு வந்திருந்தனர். பொதுமக்கள் யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், வியாபாரமின்றி, வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். ஆனால், மதியம், வாரச்சந்தை குத்தகைதாரர்கள், சுங்க கட்டண வசூலிக்க வந்தனர். அப்போது வியாபாரிகள், 'ஒரு ரூபாய்க்கு கூட வியாபாரம் நடக்கவில்லை. அதனால் சுங்க கட்டணம் தர முடியாது' என தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், சூழ்நிலையை அறிந்த குத்தகைதாரர்கள், வியாபாரிகள் கொடுத்த குறைந்த தொகையை பெற்றுக்கொண்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.