ADDED : அக் 17, 2026 05:23 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம்:குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் ரமேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குமாரபாளையம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் படி, நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், திடக்கழிவுகள் தனித்தனியாக சேகரித்து, மட்கும் உரம் தயாரிக்கவும், மட்காத பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளுக்காக சிமென்ட் ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் கழிவுகளை தரம் பிரித்து வழங்கினால், மேலும் இப்பணிகளை மேற்கொள்ள வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
