/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காஸ் டேங்கர் லாரிகள் 'ஸ்டிரைக்' 2 நாட்களில் ரூ.6 கோடி இழப்பு
/
காஸ் டேங்கர் லாரிகள் 'ஸ்டிரைக்' 2 நாட்களில் ரூ.6 கோடி இழப்பு
காஸ் டேங்கர் லாரிகள் 'ஸ்டிரைக்' 2 நாட்களில் ரூ.6 கோடி இழப்பு
காஸ் டேங்கர் லாரிகள் 'ஸ்டிரைக்' 2 நாட்களில் ரூ.6 கோடி இழப்பு
ADDED : மார் 29, 2025 07:26 AM
நாமக்கல்: நாமக்கல்லில், தென் மண்டல எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமை-யாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன், செயலாளர் செந்தில் ஆகியோர் கூறியதாவது:
தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில், காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் காரணமாக, சமையல் காஸ் ஏற்றுவது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு குறைந்த-பட்சம், 1,000 லாரிகள் முதல், 1,500 லாரிகள் வரை காஸ் ஏற்ற-வில்லை. ஆனால், ஏற்கனவே ஏற்றப்பட்ட சமையல் காஸ் அந்-தந்த பாட்டலிங் மையங்களில் இறக்கப்பட்டு வருகிறது.
வேலைநிறுத்த போராட்டத்தால், நாளொன்றுக்கு, மூன்று கோடி ரூபாய் வீதம், இரண்டு நாட்களில், ஆறு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், நான்கு நாட்களுக்குள் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும். அதற்குள் ஆயில் நிறுவன அதி-காரிகளிடம் இருந்து லாரி உரிமையாளர்களுக்கு சாதகமான தகவல் வரும் என நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.