/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காலி பணியிடங்களை நிரப்ப அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
காலி பணியிடங்களை நிரப்ப அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்ப அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்ப அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 09, 2024 06:22 AM
நாமக்கல்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வலியுறுத்தி, நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணைத்தலைவர் இளவேந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகேசன் கோரிக்கையை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத கால நிலுவைத்தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய், கிராம உதவியாளர்கள், ஊர்புற நுாலகங்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் முன்றரை லட்சம் ஊழியர்களுக்கு, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும், ஓயவூதியமும் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்த வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை, காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.