/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அறிவியல் திருவிழாவில் ஆய்வறிக்கை அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு
/
அறிவியல் திருவிழாவில் ஆய்வறிக்கை அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு
அறிவியல் திருவிழாவில் ஆய்வறிக்கை அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு
அறிவியல் திருவிழாவில் ஆய்வறிக்கை அரசு பள்ளி மாணவியருக்கு பாராட்டு
ADDED : டிச 10, 2025 10:34 AM
நாமக்கல்: இந்திய சர்வதேச அறிவியல் திரு விழாவில், கொல்லிமலை அரசு பள்ளி மாணவ, மாணவியர், தங்களது ஆய்வறிக்கையை சமர்ப்பித்து பாராட்டு பெற்றனர்.
ஹரியானா மாநிலம், பஞ்சுகுலா என்ற இடத்தில், 'இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா-2025', கடந்த, 6ல் துவங்கி, நேற்று வரை, நான்கு நாட்கள் நடந்தது. அதில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, குஜராத், டில்லி உள்ளிட்ட மாநிலங்கள், துபாய், குவைத் மற்றும் பல்வேறு மாநிலங்கள், நாடுகளை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.தமிழகத்தில் இருந்து, அரசு பள்ளிகளை சேர்ந்த, 30க்கும் அதிகமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அதில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தாலுகா, நத்துக்குழிப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில், 8ம் வகுப்பு மாணவியர் சத்யா, தர்ஷனா, கவுசிகா, வைஷாலி, பத்தாம் வகுப்பு மாணவர்கள் நட்புச்செல்வன், ஹர்ஷத், ஜீவானந்தம், சஞ்சீவ், மிதுள்ராஜா மற்றும் அறி-வியல் பட்டதாரி ஆசிரியர் சந்திரசேகரன், பெற்றோர் செல்வராணி ஆகியோர் பங்கேற்-றனர்.இந்த மாணவ, மாணவியர், 'வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்' என்ற தேர்வில் வெற்றி பெற்று, இந்திய சர்வதேச அறிவியல் திருவி-ழாவில், இன்டர்நேஷனல் ஒலிம்பியாட் ஸ்டூடன்ட்ஸ் மீட்' (ஐ.ஓ.எஸ்.எம்.,) மற்றும் ஸ்டூடன்ட்ஸ் சயின்ஸ் டெக்னாலஜி அண்டு வில்லேஜ் (எஸ்.எஸ்.டி.வி.,) ஆகிய, இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சியில், 'காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம்' என்ற தலைப்பின் கீழ், மாணவ, மாண-வியர் தங்களது ஆய்வறிக்கையை சமர்ப்பித்து, சர்வதேச மாணவர்களிடமும் மற்றும் இந்திய சர்-வதேச அறிவியல் திருவிழா குழு உறுப்பினரிடம் பாராட்டு பெற்றனர்.

