ADDED : டிச 28, 2024 02:09 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியனில், குண்டுமல்லி பூக்கள் அதிகளவில் பயி-ரிடப்பட்டுள்ளது. விசேஷ நாட்களில் குண்டுமல்லி பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, கிலோ, 1,500 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
ஆனால், முகூர்த்த தினங்கள் இல்லாத மாதங்களில் கிலோ, 400 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, எந்-தாண்டும் இல்லாத அளவில், மார்கழி மாதத்தில் ஏற்பட்ட புய-லாலும், பனிப் பொழிவாலும், குண்டுமல்லி பூக்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.தினமும், 4 டன் குண்டுமல்லி பூக்கள் ஏலத்திற்கு அனுப்பி வந்த நிலையில், தற்போது, பூக்கள் வரத்து குறைந்ததால், 1 டன் கூட விளைச்சல் வரவில்லை என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால், கடந்த, ஒரு வாரத்திற்கும் மேலாக குண்டுமல்லி பூக்கள் விலை, 1,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று, 200 உயர்ந்து கிலோ, 1,600 ரூபாய்க்கு விற்-பனை செய்யப்பட்டது.