/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆந்திராவிலிருந்து லாரியில் கடத்தி வந்த ரூ.16 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

ADDED : மே 15, 2025 02:00 AM
கிருஷ்ணகிரி :ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு லாரியில் கடத்தி வந்த, 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை, பர்கூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் எஸ்.எஸ்.ஐ., சக்திவேல் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு, காரக்குப்பம் மேம்பாலம் அருகே, சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனச்சோதனை நடத்தினர். நேற்று அதிகாலை, 3:30 மணியளவில் அவ்வழியாக வந்த ஈச்சர் லாரியை மடக்கினர். ஆனால், நிற்காமல் கிருஷ்ணகிரி சாலையில் வேகமாக சென்ற லாரியை, போலீசார் ஜீப்பில் துரத்தினர். காரக்குப்பம் அருகே லாரியை நிறுத்தி விட்டு, லாரியில் இருந்தவர்கள் தப்பினர்.
லாரியை, போலீசார் சோதனையிட்டதில் பாக்குமட்டைகளை வெளியே வைத்து, உட்புறத்தில், அரசு தடை செய்த புகையிலை பொருட்களை மூட்டைகளில் அடுக்கி இருந்தது தெரிந்தது. அதை கண்டறிந்த போலீசார், லாரியில் கடத்தி வந்த, 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 2,570 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரியில் இருந்து, தப்பியோடியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.